உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

#HANTAVIRUS மற்றுமொரு ஆட்கொல்லி வைரஸ் எச்சரிக்கை

மற்றுமொரு பாரிய உயிர்கொல்லி நோய் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தளங்கள் ஊடாக வௌிவர ஆரம்பித்துள்ளன.

#HANTAVIRUS என்ற பெயருடைய இந்த வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக RT செய்தி இணையத்தளம் தகவல் வௌியிட்டுள்ளது.

ஒரு வகை காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் உயிரிழப்பதற்கு இந்த புதிய வகை வைரஸ் காரணம் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முழு உலகமும் இன்று போராடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், #HANTAVIRUS  மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

சீனாவின் தெற்கு யூனான் மாகாணத்திலேயே இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்த நபர் யூனான் மாகாணத்திலிருந்து மற்றுமொரு மாகாணத்திற்கு பஸ்ஸில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதன் காரணமாக அந்த பஸ்ஸில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

#COVID-19 வைரஸ் போன்றே இந்த புதிய வைரஸும் ஆபத்தானது என்று அறியப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் அறிகுறிகளே பெரும்பாலும் இந்த #HANTAVIRUS க்கும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோய்த் தாக்கத்திற்குள்ளான கொறித்துண்ணிகள் மூலமே  #HANTAVIRUS  மனித உடலுக்குள் பரவுவதாக நம்பப்படுகின்றது.

பெரும்பாலும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலேயே இந்த வைரஸ் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments