அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள கைதிகளால் இன்று மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை சிறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் தப்பிச்செல்ல முற்பட்ட வேளையில், அவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிறைச்சாலை அதிகாரிகளால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 05 கைதிகள் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதனையடுத்து கைதிகள் எவரும் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்லவில்லை என்பதுடன், கலகம் விளைவித்த கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அனுராதபுரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், கலகத் தடுப்புப் பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Post a Comment

Previous Post Next Post