உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

UPDATE: ​கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் ஊரடங்கு நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றைய தினமே நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (26) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பிரகடனப்படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வௌிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நாட்டினுள் விவசாயம், மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், அ்த்தியாவசிய சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


No comments