உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனாவை கட்டுப்படுத்துமாறு ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தென் கிழக்காசிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.



வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக ஆசிய நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை பெரும் போராட்டத்துடன் முன்னெடுத்து வருகின்ற நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இவற்றுள் இலங்கை, மலேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

https://www.google.com/maps/d/viewer?mid=1UPMGC3gKiJTlSPusbfnW3XcECxyLv8f1&ll=7.582930721334695%2C80.75500175000002&z=8

எவ்வாறாயினும், தெற்காசிய உபகண்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் குறைவாகவே காணப்படுகின்ற போதிலும், பரவும் வேகம் திடீரென அதிகரித்து ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பையும் சீர்குலைத்துவிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் சில நாடுகள் எல்லைக்கட்டுப்பாடுகளை உடன் அமுலாகும் வகையில் விதித்துள்ளதுடன், வைரஸை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

தென் கொரியா, ஹொங்கொங் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளதுடன், வௌிநாடுகளில் இருந்து தத்தமது நாடுகளுக்குத் திரும்புகின்றவர்களால் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவக்கூடிய சா்தியம் காணப்படுவதாக பீ.பீ.சீ செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என உறுதிசெய்யப்பட்ட 200,000 க்கும் அதிகமானவர்கள் உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் சீனா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளே மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments