உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 02 பேர் பூரண குணம்

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தவர்களில் மேலும் 02 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

குணமடைந்த இரண்டு பேரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டிற்குள் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆகும்.

No comments