உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

06 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நாளை (16) வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.

20 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருட் கொள்வனவு தவிர்ந்த ஏனைய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

இதுதவிர கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் அவ்வாறே கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



#CoronaVirus #COVID-19 #CURFEW #Local #SocialMedia #Srilanka, 

No comments