உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

​ஒரே நேரத்தில் 10 ஆடுகள் உயிரிழப்பு - கொவிட்-19 என சந்தேகம் (Photos)

மொனராகலை பிரதேசத்தில் 10 ஆடுகள் ஓரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இந்த ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மொனராகலை, அலியாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த 11 ஆடுகளில், 10 ஆடுகள் இன்று (07) அதிகாலை திடீரென ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன.




இந்த ஆடுகள் சில தினங்களுக்கு முன்னர் மயக்கமுற்றதாகவும், மிருக வைத்தியரின் ஆலோசனையின் பிரகாரம் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இதன் பின்னர் குணமடைந்த ஆடுகளில் 10 ஆடுகள் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளன.

ஒரேயொரு ஆடு மட்டும் உயிர்தப்பியுள்ள நிலையில், மிருக வைத்தியர்களின் உதவியுடன் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

திடீரென இந்த 10 ஆடுகளும் உயிரிழப்பதற்கான காரணம் குறித்து பிரதே பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, மிருகங்களுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவும் சாத்தியமுள்ளதால், இந்த 10 ஆடுகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக பிரதேச தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும், இந்த ஆடுகள் உயிரிழந்தமைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மொனராகலையில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றதை பொலிஸார் உறுதிப்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், வைரஸ் தொடர்பில் மக்கள் மத்தியில் போலியான தகவல்கள் பரவி வருவதாகவும், அதுகுறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் இதுவரை கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.


No comments