உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட் நிலைமையினால் நிர்க்கதிக்குள்ளான இலங்கை மாணவர்கள் 101 பேர் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு (PHOTOS)

கொவிட்-19 வைரஸ் பரவுகின்றமையால் இந்தியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த மற்றுமொரு மாணவர் குழுவினர் இன்றைய தினம் (23) விசேட விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்படுகின்றனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் UL1145 என்ற விசேட மீட்பு விமானம் மூலம் 101 மாணவர்கள் குழு நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா KandyTamilNews க்கு உறுதிப்படுத்தினார்.

இந்தியாவின் அம்ரித்ஸார் பகுதியில் இருந்து இந்த மாணவர் குழுவினர் பிற்பகல் 2.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் இந்த மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவன ஊடக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

No comments