கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்.
லண்டனிலுள்ள சென்.தோமஸ் வைத்தியசாலையின் அவசர கண்காணிப்புப் பிரிவில் பிரித்தானிய பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து இன்று (12) அவர் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.
6.40PM (update)
இதேவேளை, வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய போதிலும், உடனடியாக பொரிஸ் ஜோன்சன் கடமைகளுக்காக திரும்பமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்தும் சில தினங்களுக்கு டவுனிங் வீதியிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
வைரஸ் தொற்றினால் நடப்பதற்குக் கூட சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த இரண்டு நாட்களாக வைத்தியசாலையில் சிறிது நடைப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது.
தகவல் மூலம்: BBC.COM https://www.bbc.com/news/live/world-52259683 |