உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம்

புதிதாக கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவினால் இந்த தகவல் சற்று முன்னர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர 137 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதுடன், 34 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறிச் சென்றுள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 05 பேர்  இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments