உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் பூரண குணம்

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் 03 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பூரண குணமடைந்த இந்த மூன்று பேரும் இன்று (09) வைத்தியசாலையில் இருந்து வௌியேறியதாக சுகாதார அமைச்சு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதற்கமைய கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 47 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதேவேளை 135 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞான பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 189 வரை உயர்ந்துள்ளடன், இந்த வைரஸ் தொற்று காரணமாக 07 மரணங்களும் பதிவாகியுள்ளன.


No comments