உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 09 பேர் பூரண குணம்

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாயிகிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் இன்று (18) பூரண குணமடைந்துள்ளனர்.

இந்த 9 பேரும் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைகளின் பின்னர் இதுவரை 86 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 04 பேர் புதிதாக கொவிட் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 248 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 155 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments