உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை இன்று (02) பிற்பகல் 1.30 வரை பதிவாகியதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான விஞ்ஞான ஆய்வுப் பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.

கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டவர்களில் 21 பேர் சிசிக்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதற்கமைய 126 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments