உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19: தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு

இலங்கையினுள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 வரை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் இரவு 10 மணியளவில் வௌியிடப்பட்ட தகவலின் பிரகாரம் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இறுதியாக அறிவிக்கப்பட்டு ஒருசில மணித்தியாலங்களுக்குள் மேலும் 04 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 136 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்த 25 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வௌியியேறியதாகவும் சுகாதார அமைச்சு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments