உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 பரவல் அதிகரிப்பிற்கு மத்தியில் 50 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர்

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் பிரஜைகள் ஒரு குழுவினர் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர்.

இதன்பிரகாரம் 50 பாகிஸ்தானியர்கள் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL1185 என்ற விசேட விமானம் மூலம் இன்று காலை 7.00 மணிக்கு தாய்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் அவிறித்துள்ளது.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் அரசாங்கம் ஆகிய தரப்புகள் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த 50 பாகிஸ்தானியர்களும் வெற்றிகரமாக தமது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுளள்னர்.

பாகிஸ்தானியர்களை வழியனுப்பி வைப்பதற்காக உயர்ஸ்தானிகர் சார்பில் துணை உயர் ஸ்தானிகர் தன்வீர் அகமது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

இதேவேளை, தம்மை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவிய  பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு தமது நன்றிகளை பாகிஸ்தான் பிரஜைகள் தெரிவித்தனர்.

மேலும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை அடுத்து சிரமங்களை எதிர்கொண்ட பாகிஸ்தான் சமூக உறுப்பினர்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளுக்கு தாய்நாடு திரும்புவதற்கு முன்னர் விமான நிலையத்தில் வைத்து பாகிஸ்தானியர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Deputy High Commissioner, Mr. Tanvir Ahmad with departing Pakistanis at BIA, Colombo.


No comments