உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19: மற்றுமொருவர் குணம், பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளாதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்கமைய கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர வைரஸ் தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக 07 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments