உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 போராட்ட வீரர்களுக்காக தாமரைக் கோபுரம் ஔிரவிடப்பட்டு கௌரவம் (PHOTOS)

இலங்கையின் பிரதான அடையாளங்களில் ஒன்றான தாமரைக் கோபுரம், கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்காக இன்று (11) ஔிரவிடப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினர், ஆயுதப் படையினர், பொலிஸ் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிவரும் அனைத்துத் தரப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் தாமரைக் கோபுரம் இன்றிரவு ஔிரவிட்டப்பட்டது.

தாமரைக் கோபுரம் இன்று மாலை 6.45 முதல் ஔிரவிடப்பட்டது.

நன்றி - கலாவர்ஷ்னி கனகரட்ணம்

நன்றி - கலாவர்ஷ்னி கனகரட்ணம்

நன்றி - கலாவர்ஷ்னி கனகரட்ணம்

நன்றி - கலாவர்ஷ்னி கனகரட்ணம்

நன்றி - கலாவர்ஷ்னி கனகரட்ணம்

நன்றி - கலாவர்ஷ்னி கனகரட்ணம்

அனைத்துத் துறையினரதும் ஒத்துழைப்புகள் மற்றும அர்ப்பணிப்புகளை அடையாளப்படுத்தும் வகையில் விசேட நிறத் தொகுப்பில் முழு உலகிற்கும் முன்மாதிரியாக தாமரைக் கோபுரம் ஔிரவிடப்பட்டதாக தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனைடுத்து, "இலங்கையில் கொவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்னணி பணியாளர்களினதும் அர்ப்பணிப்புகள் மற்றும் ஈடுபாடுகள் உண்மையிலேயே கவரத்தக்கது. இதற்கான கௌரவிப்பே இது" என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.



No comments