உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம்

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்ட நோயாளர் ஒருவர் இன்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தகவலை கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கையில் இதுவரை 152 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்று மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரே பதிவாகியுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் 24 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறிச் சென்றுள்ளனர்.

மேலும் 125 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைகயளிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments