உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றுக்குள்ளான இலங்கையர் அவுஸ்திரேலியாவில் மரணம்

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலியாவில் நிரந்த வதிவிடத்தைக் கொண்டிருந்த ஒருவர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

52 வயதுடைய ஒருவரே கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

சுமித் பிரேமசந்திர என்பவரே மெல்பர்னில் உயிரிழந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கையர் இவர் ஆவார்.

அவுஸ்திரேலியாவில் மரணமடைந்த சுமித் பிரேமசந்திர

No comments