உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பாடசாலைகளின் 2 ஆம் தவணை மே 11 வரை ஒத்திவைப்பு

பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 11 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அரசாங்கத்தின் பிரயத்தனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய பாடசாலை பிள்ளைகளையும் பாதுகாக்கும் நோக்கில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த திகதி இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத காலப்பகுதியில் மாணவ, மாணவிகளின் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தொலைக்கல்வி முறையை இயன்றளவில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைகழக கல்வி நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் திகதியை, தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னர், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகிய தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறும் உயர்கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


No comments