உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

2, 3, 5 ஆம் திகதிகளில் மருந்தகங்களை திறப்பதற்கு நடவடிக்கை

அரச மருந்தகங்கள் (ஒசுசல) மற்றும் ஏனைய அனைத்து தனியார் மருந்தகங்களையும் இன்று (02) முதல் 3 நாட்களுக்கு திறந்துவைக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏப்ரல் 02ஆம், 03 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் இந்த மருந்தகங்கள் திறக்கபடவுள்ளன.

ஓய்வூதியம் பெறுகின்ற சிரேஷ்ட பிரஜைகள் தங்களின் மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு வசதியாக மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தங்களிடமுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டையை ஊரடங்கு சட்டத்தின்போதான அனுமதி அட்டையாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மாஅதிபரினால் இந்த விடயம் குறித்து நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments