உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

யாழ்ப்பாணத்தில் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 3 பேர் இன்று (01) யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளனர்.

பலாலி தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேர் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவர்களில் 3 பேருக்கே வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

No comments