உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட் வைரஸால் இலங்கையில் 7 ஆவது மரணம் பதிவு

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இலங்கையில் 7 ஆவது மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.

ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இந்த வர்த்தகர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

44 வயதான கல்கிசை பகுதியைச் சேர்ந்த நபரே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று (08) மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.





No comments