உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

எமிரேட்ஸில் உள்ள இலங்கையர் தொடர்பில் வௌியான காணொளிகள் போலி - இலங்கைத் தூதரகம்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தங்கியிருக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உதவிகளுக்காக, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான இலங்கைத் தூதரகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பிழையான தகவல்களை உள்ளடக்கிய சில காணொளிகள் உறுதி செய்யப்படாத நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை குறித்து இலங்கைத் தூதரகம் அண்மையில் கவனம் செலுத்தியிருந்தது.

கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகள், வைத்தியசாலைகளுக்கும், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு மிக உயர்ந்த முறையில் கண்காணிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை கொன்சுலர் ஜெனரல் அலுவலகம் ஆகியன இணைந்தும், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், நலன்புரி சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக மற்றும் மத அமைப்புகளும் இந்த இலங்கையர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தன.

எனவே, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை கொன்சுலர் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு வினவமுடியும் என்றும் இலங்கைத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments