src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> அரச - தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசனை - KTN

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

அரச - தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசனை

அரச மற்றும் தனியார் துறை பணிகளை இன்னும் சில தினங்களில்  ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளின் போதும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முதலிடம் அளிக்கப்படும் வகையிலும், இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புதிய பொருளாதார முறைமையொன்றை கட்டியெழுப்பும் பொறிமுறையை அமைக்கும் பொறுப்பு அமைச்சுக்களுக்கு வழங்கப்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சுகளின் செயலாளர்களுடன் (15-04-2020) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடமைகளை தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாய, மீன்பிடி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட கைத்தொழில் நிறுவனங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான பின்புலத்தை அமைப்பதற்கான உதவியை அமைச்சுக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சரவையின் செயலாளர் எஸ். அமரசேக்கர ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.



No comments