src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு நிவாரணம் - KTN

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு நிவாரணம்

நாடளாவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், தமது சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல் மேல் மாகாணத்திற்குள் சிக்குண்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக நிவாரண சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு மேல் மாகாண ஆளுநரினால் 011-2092720 என்ற தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்குள் சிக்கியிருக்கும் வௌி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேல் மாகாண ஆளுநரின் நிவாரண சேவைகள் நிலையத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments