உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதிக்கு வலியுறுத்தல் (கடிதம் இணைப்பு)

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சிகள் பலமான கோரிக்கையை முன்வைத்துள்ளன.

பொறுப்புடனான ஒத்துழைப்பை வழங்கும் தங்களின் நல்லெண்ணத்தை ஏற்று 2020 மார்ச் மாதம் 02 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து வௌியிட்ட பிரகடனத்தை இரத்துச் செய்து,  அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து வைரஸை அழிப்பதற்கும், அனைத்தும் சட்டபூர்வமாகவும், அரசியலமைப்புக்கு உட்பட்டும் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் எதிர்கட்சியினர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட பின்பு ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்றும் கட்சித் தலைவர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தி சார்பாக சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜாதிக சிஹல உருமய சார்பாக பாட்டலி சம்பிக ரணவக்க, தமிழ் மூற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷார்ட் பதியுதீன் ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

மாற்று செயற்பாடாக ஜனாதிபதி குறைந்தது அரசியலமைப்பின் 70(7) உறுப்புரையின் கீழ், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பொறுப்புடனான ஒத்துழைப்புக்கான இந்த யோசனையானது எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இதயசுத்தியுடன் நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மைக்காக மட்டுமே செய்யப்படுகின்றது என்பதில் ஜனாதிபதியும், முழு நாடும் எவ்வித சந்தேகமும் கொள்வதற்கு தேவையில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்கட்சியின் 7 தலைவர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முழுமையான கடிதம் பின்வருமாரு...
(ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரதிகள் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.)






No comments