உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பாராளுமன்றத்தை கூட்டி மீண்டும் நெருக்கடிக்கு இடமளிக்க மாட்டேன் - கரு ஜயசூரிய

 பாராளுமன்றத்தை மீளவும் கூட்டி மீண்டுமொரு அரசியல் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு விரும்பவில்லை என அரசியலமைப்பு பேரவையின் தலைவரான  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தை மீளவும் கூட்டவேண்டும் என மக்கள் மத்தியில் பரவும் கருத்தாடல் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் கவனம் செலுத்தப்பட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (23) கூடியதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, தலதா அதுகோரள, மக்கள் விடுதலை முன்னணி சார்பாக பிமல் ரத்நாயக்க ஆகியோருடன் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற அறிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பேரவைக்கு அனுப்பப்ட்ட இரண்டு கடிதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கரு ஜயசூரிய, அரசியல் குழப்பங்களின்போது வியாக்கியானம் அளிக்கும் பொறுப்பு உயர்நீதிமன்றத்திற்கே உள்ளது எனவும், அதன் பிரகாரமே தாம் செயற்படுவதற்கு கட்டுப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, முழு உலகையே பாதிக்கும் வகையில் தொற்றுநோய் நிலவும் தருணத்தில் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க வேண்டாம் என அனைத்து தரப்புகளிடமும் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட்-19 தொற்று தொடர்பான தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.
No comments