அத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்
நாட்டினுள் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அனாவசியமாக வீதிகளுக்கு வருவது மற்றும் வேறு இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், ரயில்க ஊடான பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனையவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளியில் செல்லமுடியும் என்பதுடன், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும்.
வாரத்தின் ஐந்து வேலை நாட்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.
அலுவலகங்களை திறந்து பணிகளை மேற்கொள்கின்ற போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும், விற்பனை நிலையங்களிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
கிருமி தொற்று நீக்கம், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவிக்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடங்கும்.
எவரேனும் மேற்படி ஒழுங்குகள் நடைமுறைகளை மீறுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

- திங்கட்கிழமை: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 1 அல்லது 2 என்ற இலக்கத்தினைக் கொண்டவர்கள்.
- செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்.
- புதன் : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்.
- வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
- வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

No comments