உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பாதுகாப்பு படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்காக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (27) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படைகளின் உத்தியோகத்தர்கள் மீண்டும் தத்தமது முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை மறுதினமான செய்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்ப்படும்.

அன்றைய தினமே இந்த மாவட்டங்களில் இரவு 8.00 மணிக்கும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments