ஊரடங்கு சட்டத்திற்கு முரணாக கண்டியில் நடமாட்டம்
மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட்-19 அச்சுறுத்தல் காணப்படும் ஆறு மாவட்டங்களில் கண்டி மாவட்டமும் ஒன்றாகும்.
கண்டி மாநகரில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பான முறையில் சற்று அதிகமான வாகனப் போக்குவரத்தையும் மக்கள் நடமாட்டத்தையும் அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கண்டி - பேராதனை பிரதான வீதியின், கெட்டம்பே சந்தியிலும், வைத்தியசாலையை அண்மித்த பிரதான வீதியிலும், மேலும் சில இடங்களிலும் அதிக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.
அதேபோன்று மக்களும் ஆங்காங்கே நடமாடுவதை காணக்கூடியதாக இருந்ததென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 07 பேர் கண்டியிலும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அக்குரணை பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டு, பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இதனையடுத்து தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் தொடர்பாக Kandy Tamil News க்கு கிடைத்திருந்த சில நிழற்படங்கள் வருமாறு:

![]() |
கொவிட்-19 வைரஸ் தொடர்பில் இலங்கை தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் வௌியிடப்பட்ட இன்றைய சூழ்நிலை அறிக்கை (06-04-2020) |

No comments