src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> இராணுவ முகாம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு - KandyTamilNews

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இராணுவ முகாம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு


இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயா போர்ஸ், ரொஷான் குணதிலக்க தலைமையில் விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

முப்படை முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் பங்குபற்றியிருந்தனர்.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் வழிகாட்டலுடன் இராணுவ முகாம்களில் முழுமையான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பு புதிய ஜனாதிபதி செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முப்படைக்கு சொந்தமான அனைத்து முகாம்களையும் கண்காணித்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது நிபுணர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்பதுடன், முகாம்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக தேவையின் அடிப்படையில் விசேட வைத்திய நிவுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி குழுவிற்கு பணிப்புரை விடுத்தார்.





No comments