உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா ஒழிப்புக்காக சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு உபகரணங்கள் நன்கொடை

சிங்கப்பூர் நன்கொடையாளர்களினால் கொரோனா ஒழிப்புக்காக இலங்கைக்கு சுகாதார உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் மகாகருணா பௌத்த சங்கத்தின் தலைவரும் லங்காராமாதிபதியுமான சங்கைக்குரிய கே. குணரத்ன தேரர், இலங்கை உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்த்தன மற்றும் Humanity Matters சங்கத்தின் தலைவர் Ong Keng Yong ஆகியோர் கொவிட்-19 வைரஸ் ஒழிப்புக்காக அன்பளிப்பு செய்த சுகாதார உபகரணங்கள் தொகுதி இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டது.

10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வெப்பமானி உபகரணங்கள் ஆகியன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச விவாகரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹண அபேவர்த்தன ஆகியோர் இந்த உபகரண தொகுதியினை பொறுப்பேற்றனர்.


No comments