உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

சமூக ஊடகங்களில் இனக் குரோதம் ஏற்படுத்தும் பதிவிடுவோருக்கு எதிராக விசாரணை

பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ள குரல்பதிவு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொவிட்-19 வைரஸ் காரணமாக உயிரிழக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக சமூக ஊடகங்கள் வாயிலாக குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துகளை பகிர்வோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (04) விசேட உரையொன்றை அவர் ஊடகங்களுக்காக ஆற்றியபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தல் மற்றும் அதற்குரிய காரணங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவே மக்களுக்கு அறிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவிப்பையே முப்படைகள், சுகாதார அமைச்சு, அரசாங்கத் தகவல் திணைக்களம் ஆகியன அறிவிப்பு செய்வதுடன், வேறு எந்தவொரு தரப்பும் அதுகுறித்து தனியாக அறிவித்தல் விடுக்க முடியாது என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் பரவுவதன் காரணமாக முழு நாட்டையும் முற்றாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்ற மற்றுமொரு தகவலும் போலியானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிரச்சாரம் தொடர்பாக புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments