உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தபால் திணைக்கள ஒத்துழைப்பில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே கொண்டுசென்று விநியோகிப்பதற்கான சேவை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் அச்சத்திற்கு மத்தியில், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், தகவல் மற்றும் ஊடகததுறை அமைச்சர் பந்துல குணவர்தன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமது நாளாந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டுசென்று விநியோகிப்பதற்கு தபால் காரியாலங்களை வலுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய விற்பனையாளர்களால் தயார் படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக நுகர்வோருக்கு கொண்டுசென்று சேர்ப்பதற்கான தபால் திணைக்களத்தின் தேசிய திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறு சுப்பர் மார்கட் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அருகில் இருக்கும் தபால் காரியாலயங்கள் அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பெடுத்து தபால் திணைக்கள தலைமையத்துடன் இணைந்துகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலந்தி       - 071 80 98 700
தினுஷ        - 071 44 31 624
சன்ன        - 071 81 94 214
அனில்        - 071 81 94 224
உத்பல        - 071 880 79 21
அஸ்மின்   - 076 100 20 05 (தமிழ் மொழியில்)


No comments