உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING: மேலும் 14 கொரோனா நோயாளர்கள் அடையாளம் | மொத்தம் 233

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் இன்றைய தினம் (14) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கடைசியாக அடையாளம் காணப்பட்ட 14 பேரும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் புத்தளம் பகுதியிலுள்ள தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

ஏனையவர்களில் 8 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலும் மிகுதி 4 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


No comments