உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING: கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியது - 46 பேர் இன்று அடையாளம்

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 400 ஐத் தாண்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானப் பிரிவின் தரவுகளுக்கு அமைவாக இன்று (24) மாலை 6.00 மணிக்கு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 46 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 30 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

11 பேர் பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மேலும் 05 பேர் ஏனைய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் 300 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 107 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.No comments