உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஆபத்தான கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் PCR பரிசோதனைக்கு (VIDEO)

ஆபத்துமிக்க கடமைப் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக ஊரடங்கு காலப்பகுதியில் கைதுநடவடிக்கைகள், சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தௌிவுபடுத்தியுள்ளார்.கட் -
பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன
ஊடகப் பேச்சாளர்
ஶ்ரீலங்கா பொலிஸ்

"இலங்கை பொலிஸார் பல்வேறு துறைகளில் தற்போது கடமையாற்றி வருகின்றனர். குறிப்பாக கடற்படையின் உத்தியோகத்தர்கள் பல்வேறு பகுதிகளில் தொற்றுக்கு இலக்காகி இருப்பதை நாம் அறிவோம். அதேபோன்று இலங்கைப் பொலிஸ் துறையின் உத்தியோகத்தர்களும் தற்போது அவதானமிக்க சேவையே ஆற்றிவருகின்றனர். இந்த உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்றாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். கொவிட் தொற்றாளர் எவரேனும் ஒருவருடன் தொடர்புபடுவதற்கு நேரிட்டால் உடனடியாக அந்த பொலிஸ் உத்தியோகத்தரை PCR பரிசோதனைக்காக உட்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. சுகாதார தரப்புடன் இணைந்து இத்தகைய பரிசோதனைகள் பலவற்றை நாம் மேற்கொண்டுள்ளோம். கடமையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் PCR பரிசாதனைகளை நடத்தும் பொருட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட அனுமதியொன்றை வழங்கியுள்ளார். அண்மையில் வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் எமது உத்தியோகத்தர்கள் பலர் ஆபத்து மிக்க சூழ்நிலையில் கடமைப் பொறுப்பாற்றியிருந்தனர். கடந்த இரண்டு நாட்களில் பல உத்தியோகத்தர்களை நாம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியிருந்தோம். இந்த பரிசோதனைகளில் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.  எவ்வாறாயினும், மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. "


SP Jaliya Senarathne - Sporksman
SL PoliceNo comments