உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் மேலும் நீடிப்பு - PMD

அரச மற்றும் தனியார்  ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் ஏப்ரல் 20 வரை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நீடிக்கபபட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணிபுரியும் காலம் ஏப்ரல் 20 திங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 16 காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இ்ந்த மாவட்டங்களில் காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இதுதவிர கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments