உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பலகோடி வெளிநாட்டு உதவிகளை என்ன செய்யப் போகிறீர்கள்? - அரசிடம் மனோ கேள்வி (VIDEO)

கொவிட்-19 வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு கிடைத்துள்ள பலகோடி பெறுமதியுடைய வௌிநாட்டு பண உதவிகளை என்ன செய்யப் போகின்றீர்கள் என அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக சுகாதார துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர்கள் மேற்கொண்டு வரும் அளப்பரிய சேவைகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அமெரிக்கா, சீனா, உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய தரப்புகளில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பெருமளவு பண உதவிகளை வருமானம் இழந்த  மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளும், மருத்துவ உபகரணங்களும் போதுமானளவு கொள்வனவு செய்யப்பட வேண்டும்.

மக்களுக்கான பெருமளவு பண உதவிகளை கையாள்வது குறித்து வௌிப்படையாக உரிய  திட்டங்களை வகுப்பதற்கான தேவையின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments