உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனாவே எமது பொது எதிரி - மஹிந்த ராஜபக்ஸ (Video)

இலங்கையின் தற்போதைய ஒரே எதிரி கொரோனா மாத்திரமே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு இன்று (07) ஆற்றிய விசேட உரையில் பிரதமர் இதனைக் கூறினார்.

இனம் மற்றும் மதம் என்பவற்றுக்கு அப்பால் இந்த உண்மை நிலையை அனைவரும் புரிந்துக்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மதம் மற்றும் இனத்திற்குத் தேவையான சடங்குகளை நிறைவேற்றும் தருணம் இதுவல்ல எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் பொதுவான மனிதர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து சிந்தித்தால் மாத்திரமே, இந்த பாரிய புதைகுழியில் இருந்து மறு பக்கத்தை நோக்கி கடந்துசெல்ல முடியும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை அடங்கிய காணொளி பின்வருமாறு: (தமிழ் உபதலைப்புகளுடன்)


நன்றி - நியூஸ்பெஸ்ட்


No comments