உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஊரடங்கை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 பேர் கைது..

தனிமைப்படுத்தல் கண்காணிப்பு சட்டத்தை மீறி பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 பேரை கினிகத்தேனையில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வட்டவளை பொலிஸாரும், ஹட்டன் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் கூட்டாக நேற்று மாலை (30) சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் 08 பேரும் கினிகத்தேனை - நாவலப்பிட்டிய வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

ஹட்டன், நாவலப்பிட்டிய, கினிகத்தேனை, அம்பகமுவ மற்றும் லக்‌ஷபான ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


UPDATE:
இந்த 08 சந்தேகநபர்களும், ஹட்டன் நீதவானிடம் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் சந்தேகநபர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

-  பொலிஸ் ஊடகப் பிரிவு

No comments