உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது - இதுவரை 1021 பேருக்கு தொற்று உறுதி

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று (19) 1000 ஐ தாண்டியது.

இதன் பிரகாரம் இன்றைய தினம் 29 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைய தினம் இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சு தகவல்களின் பிரகாரம் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1021 ஆக பதிவாகியது.

கொவிட் தொற்று இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 28 பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த கடற்படையினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றாளர்களில் 443 பேர் தற்போது மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

569 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொடர்பில் நேற்றைய தினம் (18) 960 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.No comments