உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை 771 ஆக உயர்வு - இதுவரை 9 மரணங்கள்

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 771 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகளின் பிரகாரம் 05 ஆம் திகதி (05-05-2020) நள்ளிரவு வரை கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 771 ஆக பதிவாகியுள்ளது.

இதன்படி 549 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 145 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்த 213 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆம் திகதி நள்ளிரவு வரை 9 ஆக பதிவாகியது.


வைரஸ் தொற்றுக்குள்ளாகி தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவர் இறுதியாக உயிரிழந்தார்.

தொற்றுநோய் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments