உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்வு

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் பூரண குணமடைந்த மேலும் 20 பேர் இன்றைய தினம் (09) வைத்தியசாலைகளி்ல் இருந்து வௌியேறியதாக சுகாதார மேம்பாட்டு பணியக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன் பிரகாரம் இதுவரை 260 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 575 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், 135 பேர் கொவிட் சந்தேகத்தின் பேரில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments