கொவிட்-19 பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு வாழ்வாதார உதவிகள்

கொழும்பு, ஆமர்வீதி, பரடைஸ் பார்க் பகுதியில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நேற்று (08) உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த பகுதியிலுள்ள சுமார் 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
இலங்கை சுயாதீன ஊடவியலாளர்கள் ஒன்றியத்தின் ஆலோசகர்களில் ஒருவரான டொக்டர் அனுஷ்யந்தனின் பரிந்துரையின் பேரில் சமூக சேவையாளரான தாரணி இராஜசிங்கம் உலர் உணவுப் பொதிகளை ஒன்றியத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கி வைத்தார்.
ஊடகவியலாளர்களின் மேம்பாடு கருதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் நிறுவனம் சார்ந்து பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தேவைப்படும் பட்சத்தில் உதவிகளை மேற்கொள்ளும். அத்துடன் சமூக சேவைகளில் ஈடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments