உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

2002 காணாமல்போன சார்ஜனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரல்

2002 ஆம் ஆண்டில் காணாமல் போன பொலிஸ் சார்ஜன் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கேகாலை பொலிஸ் நிலையத்தில கடமையாற்றிய 13935 என்ற இலக்கம்கொண்ட அருண சேனாதீர என்ற தனது கணவன் காணாமல் போனமை தொடர்பில் மனைவியால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து இதுவரை சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைப்பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி்க்கு 011 - 23 92 900 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments