உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

225 கிலோ ஹெரோய்னுடன் 4 பேர் பொலிஸாரால் கைது

225 கிலோகிராம்  ஹெரோய்ன் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் 4 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு மகாபாகே பொலிஸ் பிரிவின் ராகம எனுமிடத்தில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

225 கிலோகிராமும், 969 கிராமும் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றிய பொலிஸார், போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் கெப் ஆகிய இரண்டு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது வெலிசர பகுதியைச் சேர்ந்த 24, 30, 50 மற்றும் 55 வயதுகளையுடைய சந்தேபநபர்கள் நால்வரையும் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments