உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

40 பாகிஸ்தானியர்கள் விசேட விமானம் முலம் தாய்நாட்டிற்கு அனுப்பிவைப்புஇலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 40 பாகிஸ்தான் பிரஜைகள் அடங்கிய மற்றுமொரு குழு இன்று (04) நாடு திரும்பியது.

இந்த பாகிஸ்தான் பிரஜைகள் இன்று காலை 7 மணிக்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் UL-1185 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தமது நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த குழுவினரை வழியனுப்பி வைப்பதற்காக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாவது செயலாளர் ஆயிஷா அபுபக்கர் பஹத் விமான நிலையத்திற்கு சமூகமளித்திருந்ததாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி 50 பேரடங்கிய தமது நாட்டு பிரஜைகள் குழுவொன்றையும் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் நாட்டிற்கு அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments