உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

5000 ரூபா மே மாதத்திற்கும் வீடுகளுக்கே விநியோகம் - PMD

5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திற்கும் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் பேரில் வழங்கப்படும் 500 ரூபா கொடுப்பனவு இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2020 ஏப்ரல் மாதம் மேற்படி கொடுப்பனவு கிடைக்கப்பெற்ற நிலையான நன்மை பெறுநர்கள் ஆவணம், முன்னுரிமை ஆவணம் மற்றும் கிராமிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நன்மை பெறுநர்கள் ஆவணம் ஆகிய ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நன்மை பெறுநர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் அந்தந்த கிராம உத்தியோகத்தர்கள் நன்மை பெறுநர்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பனவுகளை வழங்குவர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் மே 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 15ஆம் திகதி நிறைவுசெய்யப்படவுள்ளன.

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரான பெசில் ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வருமாறு கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.


  1. முதியோர்களுக்கான கொடுப்பனவு
  2. 100 வயது பூர்த்தியான முதியோர் கொடுப்பனவு – தேசிய முதியோர் செயலகத்தின் மூலம்
  3. அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு
  4. சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு – அங்கவீனமுடையவர்களுக்கான தேசிய செயலகம்
  5. விவசாயிகளுக்கான ஓய்வூதியம்
  6. மீனவர்களுக்கான ஓய்வூதியம் – விவசாய காப்புறுதி சபையினால்


முதியோர்களுக்கான கொடுப்பனவு, நூறு வயது பூர்;த்தியான முதியோர்களுக்கான கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம் உரித்துடைய நன்மை பெறுனர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.



No comments